வீடு முழுவதும் புரோட்டீன்.. ஃப்ரிட்ஜுக்குள் Syringe - செயலிழந்த உறுப்புகள்

Update: 2025-04-09 02:04 GMT

35 வயசான பாடி பில்டர் இரண்டு கிட்னியும் செயலிழந்து பரிதாபமா இறந்து போயிருக்கிறாரு... 6 மாதத்தில் அர்னால்ட்டாக மாற நினைத்தவர் பரிதாபமாக உயிரிழந்த பயங்கரம் இது...

டூயட் பாடலுக்கு ரீல்ஸ் செய்து கொண்டிருக்கும் இந்த இளைஞர் தற்போது உயிருடன் இல்லை...

பாடி பில்டராகி பல ஸ்டேஜ் ஏற நினைத்தவர் இப்படி பாதிலேயே பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.

உடல் உறுப்புகள் செயலிழந்து, மூன்று நாட்களாக சிறுநீர் கூட வெளியேறாமல் மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்திருக்கிறது....

நடந்த பயங்கரத்திற்கு காரணம் ஹெவி டோஸ் ஊக்க ஊசி...

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் ராம்கி. 35 வயதாகிறது. இவரது மனைவி மான்விழி... இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த ராம்கி ஒரு ட்ராவல் விலாக்கர்...

அடிக்கடி வெளியூர் பிரயாணம் செய்து அந்த வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்...

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு பிட்னஸ் மீது ஆர்வம் வந்திருக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்.

இதனால் காலடிபட்டியில் உள்ள தனியார் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். நேரம் காலம் பார்க்காமல் இரவு 3 மணி வரையிலும் உடற்பயிற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், ராம்கி திடீரென வயிற்று வலியால் துடித்திருக்கிறார். தகவல் அறிந்து ராம்கியின் அண்ணி தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ராம்கியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து உடல் மோசமான நிலையில் இருப்பதாக பகீர் கிளப்பி இருக்கிறார்கள்.

மேலும் அவரின் உடலில் Creatine அளவு அதிகமாக இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் உடனே டயாலிஸிஸ் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால் ராம்கியின் உடல் டயாலிஸில் ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைக்கவில்லை... மருத்துவமனையில் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. எதுவும் பயனளிக்கவில்லை.. வாய் மூக்கு கண் என ரத்தம் வெளியேறி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.

ராம்கியின் இந்த தீடீர் மரணத்திற்கு காரணமாக மருத்துவர்கள் கூறியது, உடலில் செலுத்தப்பட்டிருந்த ஸ்டெராய்டு ஊசியின் விளைவு தான்...

ஷாட் டைம்மில் 2 ஹெவி டோஸ் ஊக்க ஊசியை செலுத்திக்கொண்டதால் இப்படி உடல் உறுப்புகள் செயலிழந்து ராம்கி இறந்ததாக கூறி உள்ளனர். அதுமட்டுமின்றி அவரது உடலில் புரோட்டீனும் அதிக அளவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

6 மாதத்தில் உடலை கட்டுக்கோப்பாக்கி பெரிய பாடி பில்டராக துடித்திருக்கிறார் ராம்கி. இதனால் அவருக்கு புரோட்டீன் பவுடர், புரோட்டீன் சாக்லேட், புரோட்டீன் கேப்சூல் என பல பொருட்களை பரிந்துரைத்திருக்கிறார் ஜிம் பயிற்சியாளர்.

புரோட்டீன் Products-களை அளவிற்கு அதிகமாக எடுத்து வந்த ராம்கி, இரவு 7 மணி முதல் காலை 3 மணி வரை விடாமல் உடற்பயிற்சி செய்துவிட்டு பொழுது விடியும் வேளையில் தான் வீட்டிற்கு வருவராம்.

போதாத குறைக்கு ஒரு வேளைக்கு ஒன்றரை கிலோ சிக்கன் மற்றும் பல முட்டைகளை டயட் ஃபுட்டாக In Take செய்திருக்கிறார்.

இப்படி ஒரே நேரத்தில் இத்தனை புரோட்டீன் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என பலரும் ராம்கியை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அவர் கேட்பதாயில்லை. பாடி பில்டராக வேண்டும் என்ற வெறி அவரின் மூளையை அரிக்க மொத்த புரோட்டீன் பொருட்களையும் Schedule போட்டு சாப்பிட்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்