திருவிடந்தையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய, பாமக நிறுவனர் ராமதாஸ் தனக்கு ஆட்சி செய்கிற ஆசை இல்லையென்றும், அப்படி இருந்திருந்தால் கவர்னராகவோ, அமைச்சராகவோ இருந்திருப்பேன் என தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் பாமகவின் சித்திரை நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய , அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலினிடம், 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வாதம் செய்ததாக தெரிவித்துள்ளார். தனியாக நின்று போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாமக, தற்போது கூட்டணியில் நின்று வெறும் ஐந்து சீட்டுகள் வெற்றி பெற்றிருப்பதாக வேதனை தெரிவித்தார்.