20 குடிசை வீடுகள் எரிந்து சேதம் - மக்கள் உடைமைகளை இழந்து தவிப்பு
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட குடிசைகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. புகை எழுந்ததை பார்த்த மக்கள், குழந்தைகளுடன் வெளியே ஓடி தப்பித்த நிலையில், தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியான தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்த நிலையில், உடைமைகளை இழந்த மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.