திருமா பற்றிய பழைய நினைவுகளை மேடையில் சொன்ன ராமதாஸ் - ஒரு நொடி அதிர்ந்த மாநாடு

Update: 2025-02-24 03:35 GMT

விசிக தலைவர் திருவமாவளவனை வடக்கே வரச்சொல்லி தான் அழைப்பு விடுத்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சோழ மண்டல சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் தென் மாவட்ட கலவரங்கள் நடந்தபோது தனக்கும்,திருமாவளவனுக்கும் அழைப்பு வந்ததாகவும், அனைத்து சமுதாய மக்களிடமும் இருவரும் சென்று பேசியதாகவும் பழைய நிகழ்வொன்றை நினைவு கூர்ந்தார். மேலும், திருமாவளவனை வடக்கே வரச்சொல்லி தான் அழைப்பு விடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்