இஃப்தார் நோன்பு நிகழ்வில் அதிமுக வேட்பாளர்.. போட்டோ எடுக்க குவிந்த மாணவர்கள்

Update: 2024-04-08 02:33 GMT

சிவகங்கையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்வில், அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் கலந்து கொண்டார். நூற்றாண்டு பழமை வாய்ந்த வாலாஜா நவாப் பள்ளிவாசலில் நடந்த இஃப்தார் நோன்பில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மத தலைவர்களுடன் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிமுக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோன்பு கஞ்சி, குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்