அதிமுகவில் இணைந்த திமுக முக்கிய புள்ளி செம்ம ட்விஸ்ட்!

Update: 2024-03-07 09:39 GMT

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்