Uttarpradesh | Jewellery | "இப்படி வந்தால் இனி நகை கிடையாது" - ஜுவல்லரி கடைகள் நூதன அறிவிப்பு
முகத்தை மூடிக் கொண்டு வந்தால் இனி நகை கிடையாது“-நூதன அறிவிப்பு
புர்கா போன்றவற்றை அணிந்து முகத்தை மூடி வரும் வாடிக்கையாளருக்கு நகைகள் விற்பனை செய்யப்படாது என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் வெளியிட்டுள்ள நூதன அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது... ஜான்சியில் உள்ள சிப்ரி பஜாரைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முகமூடி போன்றவற்றை அணிந்து நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துச் செல்லும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் இந்த முடிவை எடுத்து, காவல்துறையின் அனுமதியோடு போஸ்டரை ஒட்டியுள்ளனர்.