Protest | சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் - தள்ளு முள்ளு.. புதுச்சேரியில் திடீர் பரபரப்பு
போலி மருந்து விவகாரம் - புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்றம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை அருகே வந்த போது போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார் ஆனால் தடுப்புக்களை மீற முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.