காதலி முன்னே தாயை கொல்ல முயன்ற காதலன் - அதிர்ச்சி வீடியோ.. மக்கள் செய்த சம்பவம்

Update: 2025-03-03 03:31 GMT

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள சுட்டலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், சுஷ்மிதா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தக்காதல், சுஷ்மிதாவின் தாய் சாமந்திக்கு பிடிக்காததால் இருவரையும் பிரித்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், சுஷ்மிதாவின் தாய் சாமந்தியை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ராஜ்குமாரை தடுத்து போலீசில் புகாரளித்தனர். புகாரின்பேரில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்