Tamilnadu Government | ``தமிழகம் சிறந்து விளங்குகிறது'' - ஜெ.பி.நட்டா புகழாரம்
காசநோய்க் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா தெரிவித்துள்ளார். காசநோய் ஒழிப்புப் பணிகள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அவர் இதனை தெரிவித்தார். காசநோய் பாதிப்புகள் நகர்ப்புற குடிசைப் பகுதிகள், பழங்குடியின, புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களிடையே ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.