கோவா நைட் கிளப் தீ விபத்தை தொடர்ந்து பாங்காக் தப்பியோடிய அதன் உரிமையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்த விபத்துக்கு காரணமான நைட் கிளப் உரிமையாளர்கள் பாங்காக்கில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவா காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.