Tirupati | ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி போறீங்களா? பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தேவஸ்தானம்..
திருப்பதியில் மார்ச் மாதத்திற்கான தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவைகளுக்கு வரும் 22 ஆம் தேதி முன்பதிவு தொடங்க உள்ளது. வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் மூத்த குடிமக்கள், வரும் 23ம் தேதியும், சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை வரும் 24ம் தேதியும் புக்கிங் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.