KARNATAKA || நடுரோட்டில் உயிருக்கு போராடிய கணவன் -கெஞ்சி கதறிய மனைவி.. கண்டு கொள்ளாமல் சென்ற நபர்கள்
பெங்களூருவில் கணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் காப்பாற்ற வலியுறுத்தி சாலையில் நின்று மனைவி கதறியும் யாரும் உதவமால் போனதால் கணவன் பரிதபமாக உயரிழந்தார். நடுரோட்டில் நின்று கைகள் நடுங்க, கண்களில் கண்ணீருடன் கணவருக்கு உயிர் பிச்சை கேட்டு வாகன ஓட்டிகளிடம் மனைவி கெஞ்சி பாரத்தார். ஆனால் யாரும் உதவ முன்வராத நிலையில் கணவர் அதே இடத்தில் உயிரிழந்தார். கண்முன்னே கணவர் உயிர் போன கொடூரக்காட்சி தற்போது வைரலாகி வருகிறது