School fight || இன்ஸ்டா கமெண்ட் தகராறு பாய்ந்து பாய்ந்து அடி.. இளசுகளின் வெறியாட்டம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போட்டது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே மோதல் நடந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
குமர நெல்லூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடையே இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட் பதிவிட்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.