பூணூல் அணிந்த மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுப்பு.. கர்நாடகாவில் அதிர்ச்சி
கர்நாடகாவில், பூணூல் அணிந்ததற்காக, மாணவர் ஒருவரை பொது நுழைவுத்தேர்வு எழுத அனுமதிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீதார் மாவட்டத்தில் உள்ள சௌபாரா பகுதியை சேர்ந்த சுசிவ்ரத் குல்கர்ணி என்ற மாணவர், K-CET தேர்வுக்காக வியாழக்கிழமை தேர்வு மையம் சென்றார். அவரை தேர்வு எழுத அதிகாரிகள் மறுத்ததால், இதே மையத்தில், வேதியியல், இயற்பியல் தேர்வுகளை எழுதியதாகவும், கணித தேர்வுக்கு மட்டும் ஏன் தடை என்று, மாணவர் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், பூணூல் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று, திட்டவட்டமாக அதிகாரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது, மகனின் ஒரு வருட வாழ்க்கையே வீணாகிவிட்டதாக, மாணவனின் தாய் கண்டனம் தெரிவித்துள்ளனர்.