Sterlite Owner | ஸ்டெர்லைட் உரிமையாளர் மகன் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய வேதாந்தா

Update: 2026-01-08 10:29 GMT

வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் மரணம்

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் அமெரிக்காவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 49.

அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ்,

பனிச்சறுக்கு விளையாட்டின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ள அனில் அகர்வால், இது தனது வாழ்க்கையின் இருண்ட நாள் என்று குறிப்பிட்டுள்ளார். தனது மகனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்,

தாங்கள் ஈட்டும் வருவாயில் 75 சதவீத தொகையை சமூகத்திற்கு பயனளிக்கும் முயற்சிகளுக்கு அர்ப்பணித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழ உறுதிபூண்டுள்ளதாக அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்