நகைகளை திருடி ஜடையில் மறைத்த 3 கில்லாடி பெண்கள் கைது
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நகைக் கடையில் நகைகளைத் திருடி ஜடையில் மறைத்த பெண்களை, போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கஜுவாக்கா நகரில் வாடிக்கையாளர்கள் போல் நகை கடைக்கு சென்று நூதன முறையில் திருடிய 3 பெண்கள் வசமாக சிக்கியுள்ளனர்... வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி ஜடையில் பதுக்கி வைத்த அந்த கில்லாடி பெண்களின் திருட்டு வேலை சிசிடிவி கேமராவில் பதிவானது