Madhya Pradesh | BJP | பாஜக அமைச்சரின் மகன் காலில் விழுந்த 73 வயது MLA - வெளியான சர்ச்சை விடியோ
பாஜக அமைச்சரின் மகன் காலில் விழுந்த 73 வயது எம்எல்ஏ
மத்திய பிரதேசத்தில் 31 வயதான பாஜக எம்பியும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில் 73 வயது எம்.எல்.ஏவான தேவேந்திர குமார் ஜெயின் விழுந்து வணங்க முயன்ற வீடியோ இணையத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கலந்து கொண்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவின் மகனின் காலில் விழுந்தது குறித்து தேசிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள எம்.எல்.ஏ தேவேந்திர குமார், அது தனது தனிப்பட்ட மரியாதையின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார். மேலும், தங்களை விட வயதில் இளையவர்களின் காலில் விழக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.