Sabarimala | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு - கேரளா ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2026-01-05 14:39 GMT

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி.க்கு மேலும் 6 வாரங்கள் அவகாசம் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புனரமைப்பு பணிகளின் போது, கோயிலில் இருந்து தங்கம்‌ திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது., வழக்கை 2 வாரங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்