Uttraprdesh | பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் பாலியல் தொழில் - உபியில் அதிர்ச்சி
பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் பாலியல் தொழில்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கீட்கஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது..
தொடர்ந்து, ஐந்து பெண்கள், நான்கு ஆண் வாடிக்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலுக்கு மூளையாக செயல்பட்ட சர்வேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அந்த வீடு பெண் ஐஏஎஸ் அதிகாரி உடைய வீடு என்பதும், அவரிடம் குடும்பத்தோடு வசிப்பதற்காக கூறி மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வீட்டை எடுத்து, அதனை துணிகரமான பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.