Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2026) | 11AM Headlines | Thanthi TV
- சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.. சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - பாமக தலைவர் அன்புமணி இருவரும் சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர்..
- அதிமுக - பாமக கூட்டணி இயற்கையானது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.... அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும அவர் கூறியுள்ளார்...
- அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.... திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு கிராம் ஆபரணத் தஙகம் 12 ஆயிரத்து 870 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 960ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
- வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன...
- வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.... அமெரிக்க தூதரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 101 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்