இரண்டாக பிளந்த ரோடு - இடிந்து விழுந்த 6 வழிச்சாலையின் கட்டுமானம்.. அதிர்ச்சி வீடியோ
கேரள மாநிலம் மலப்புரத்தில், புதிதாக அமைக்கப்படும் 6 வழிச்சாலையின் கட்டுமானம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு-திருச்சூர் இடையே, ஆறு வழிச் சாலை கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில், குரியாடு மற்றும் கோலப்புரம் இடையே, கட்டுமானம் இடிந்து விழுந்தது. சர்வீஸ் சாலையில் சென்ற 5 வாகனங்கள் மீது, நெடுஞ்சாலையின் பாதுகாப்பு சுவர் விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், சர்வீஸ் சாலையில் 600 மீட்டர் அளவுக்கு விரிசல் ஏற்பட்டதால், கோழிக்கோட்டில் இருந்து கோலப்புரம் கக்காடு வழியாக திருச்சூர் செல்லும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.