Doctors | Spanner | இளைஞர் வயிற்றில் இருந்ததை பார்த்து அலறிய டாக்டர்கள்
ராஜஸ்தானில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞரின் வயிற்றிலிருந்து இரும்பு ஸ்பேனர், டூத் பிரஷ் ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். பில்வாரா பகுதியை சேர்ந்த 26 வயதான அந்த இளைஞருக்கு ஜெய்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், அந்த இளைஞர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதும் இதனால் இத்தகைய பொருட்களை அவர் விழுங்கி இருப்பதும் தெரியவந்தது.