Kerala | பஸ் மீது லாரி மோதி விபத்து - என்ஜினில் சிக்கிய ஓட்டுனர்.. பார்க்கவே பகீர் கிளப்பும் காட்சி
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் லாரியும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி பேருந்து ஓட்டுனர் இன்ஜீனுக்குள் மாட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கல்லூரி பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கிய நிலையில், அதில் மாட்டிக் கொண்ட ஓட்டுனர் பெரும் போராட்டத்திற்கு பிறகு படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில், அடுத்தடுத்து கார் உள்ளிட்ட வாகனங்களும் விபத்தில் சிக்கி நொறுங்கின. லாரி ஓட்டுநர் தூக்க கலகத்தில் இருந்ததால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடிவருகின்றனர்.