Online Marriage | உற்றார் உறவினர் ஆசியோடு ஆன்லைனில் மோதிரம் மாற்றி திருமணம்
விடுமுறை கிடைக்காததால் ஆன்லைனிலேயே நடந்த நிச்சயதார்த்தம்....
இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லாமே ஆன்லைன் என்று ஆகிவிட்ட நிலையில்... கர்நாடகாவின் ராம் நகரில் ஆன்லைன் நிச்சயதார்த்தம் ஒன்று நடைபெற்று இருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது...
கனடாவைச் சேர்ந்த மணமகனால் இந்தியாவிற்கு வர முடியாமல் போனதால் ஆன்லைனில் வீடியோ கால் மூலம் மோதிரத்தை ஒருவரிடம் ஒருவர் காட்டியும், பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றும் நடந்து முடிந்திருக்கிறது , சுஹாஸ் - மேகா ஜோடியின் இந்த நிச்சயதார்த்தம்...