மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உணவகம் ஒன்றில் “பன்றிகளுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் அனுமதியில்லை“ என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தூரில் உள்ள உணவகத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர் உருவப்படத்தில் பன்றியின் முகம் வைக்கப்பட்டுள்ள பதாகை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.