மகனுக்கு கறிவிருந்து நடத்திய மனைவியை உளியால் கொடூரமாக குத்தி கொன்ற கணவன்

Update: 2025-06-21 08:22 GMT

கடலூரில், புதிதாக திருமணமான மகனுக்கு நடந்த கறிவிருந்தில் தன்னை மதிக்காத ஆத்திரத்தில், தனது மனைவியை உளியால் குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர்கள், தச்சுத் தொழிலாளியான அண்ணாதுரை - அமுதா தம்பதி. இவர்களுக்கு ராஜதுரை என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் குடும்ப பிரச்சனை காரணமாக, அமுதா தனது மகன் ராஜதுரையுடன் குள்ளஞ்சாவடி பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மகனுக்கு திருமணம் செய்து வைத்து, கறி விருந்தும் நடத்தினார். இதில், அமுதாவின் கணவரான அண்ணாதுரையும் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற தனது மாமியாரை, அவரது வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து சென்ற நிலையில், வீட்டின் பின்புறம் இருந்த குப்பைமேட்டில் அமுதா, சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், தலைமறைவாக இருந்த அவரது கணவர் அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தன்னை கறிவிருந்தில் யாரும் மதிக்கவில்லை என மனைவியுடன் நடந்த தகராறில், ஆத்திரத்தில் மர வேலைக்கு பயன்படுத்தும் உளியால் அவரை முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின், சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்