பிரதமர் மோடியை பார்த்ததும் அமெரிக்க துணை அதிபர் கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-02-12 08:05 GMT

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த இரவு விருந்தில் பங்கேற்றார். அங்கு அமெரிக்க துணை அதிபர் JD வேன்சை சந்தித்த பிரதமர் மோடி அவருடன் கைகுலுக்கி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தனது வாழ்த்தையும் தெரிவித்தார். எக்ஸ் தளத்தில் அதிபர் மேக்ரான் பகிர்ந்த இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் JD வேன்ஸ் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட உஷாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்