கேரளாவில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, உபரி நீர் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
49 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையின் தற்போதைய நீர்மட்டம் 44 அடி அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருப்பதுடன், மழையும் பெய்து வருவதால் உபரி நீர் மதகுகள் வழியாக திறக்க விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அட்டப்பாடி மற்றும் பவானி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.