கொத்து கொத்தாக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்.. குஜராத்தில் பரபரப்பு
ம.பி.யை தொடர்ந்து குஜராத்திலும் நீர்மாசு காரணமாக பலர் பாதிப்பு
மத்திய பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் நீர் மாசு காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அசுத்தமான நீர் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் குஜராத்தின் காந்தி நகர், ஆதிவடா பகுதியில் அசுத்தமான தண்ணீர் காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.