Bus Accident || பள்ளத்தில் உருண்டு விழுந்த கல்லூரி பேருந்து..! ICU-ல் துடிதுடிக்கும் 16 பேர்..
கேரள மாநிலம் இடுக்கிக்கு கல்வி சுற்றுலா சென்ற சென்னை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் பேருந்து மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. 36 மாணவர்களுடன் சென்ற பேருந்து, பனிப்பொழிவின் காரணமாக ஓட்டுநருக்கு பாதை தெரியாததால் வாகமன் மலைப்பாதையில் உள்ள 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்கள் பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.