ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் தங்க கருட சேவை... அலைகடலென திரண்ட பக்தர்கள்

Update: 2025-04-22 10:30 GMT

சித்திரைத் திருவிழாவின் 4ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சித்திரை வீதிகள் வழியாக தங்ககருட வாகனத்தில் வலம்வந்த நம்பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று ரெங்கா..! ரெங்கா..! என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்