அவசர அவசரமாக ஸ்ரீநகர் சென்ற ராணுவ தலைமை தளபதி.. அடுத்த கட்ட நகர்வு என்ன?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தற்போதைய பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திவேதி, ஸ்ரீநகர் சென்றடைந்தார். அப்போது, பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் குறித்து தலைமைத் தளபதியிடம், ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.