நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் உயிரிழந்த ரேணுகாசாமியின் தாயார் நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி பெங்களூருவுக்கு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 274 பேர் சாட்சிகளை போலீசார் தயார் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க உள்ளதால் நடிகர் தர்ஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.