உத்தரப்பிரதேச மாநிலம் சாப்ராலி பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த உணவக ஊழியரை பாம்பு கடித்ததில், அவர் உயிரிழந்தார். உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த மனோஜ் என்பவர், இரவு வேலையை முடித்துவிட்டு தனது அறையில் உள்ள கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். தன்னை ஏதோ கடிப்பதை உணர்ந்து கண் விழித்துப் பார்த்தபோது, தன் மீது பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ், உடனடியாக உணவக உரிமையாளரிடம் இதுபற்றி கூறினார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அவரை பாம்பு கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.