மலேசியாவில் தொடங்கவுள்ள ஆசியன் லீ மேன்ஸ் கார் ரேஸ் தொடரில், நடிகர் அஜித்குமாருடன் பிரபல ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இணைகிறார்...
மலேசியாவில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில், அஜித்குமார் மற்றும் நரேன் கார்த்திகேயன் இணைந்து கார் ஓட்டுகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் சாதித்து வருகிறார். அஜித்குமார் ரேஸிங் அணி பல்வேறு நாடுகளில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் அசத்தியுள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் துவங்கவுள்ள ஆசியன் லீ மேன்ஸ் சீரியஸ் தொடரில், அஜித்குமாருடன் அவரது அணியைச் சேர்ந்த பிரபல ஃபார்முலா - 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பங்கேற்க உள்ளார். பயிற்சி மற்றும் தகுதி சுற்றுகள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளதாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜித்குமாருடன் நரேன் கார்த்திகேயன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.