இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-04-17 17:55 GMT

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்......

நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியது தேர்தல் ஆணையம்.....


தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரம்....

ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி.....


தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தனியார் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை....

வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என விசாரணை......


முசிறியில் ஐஜேகே கட்சி அலுவலகம், மற்றும் தனியார் விடுதியில் வருமான வரித்துறை திடீர் சோதனை.....

3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்ததால், ஐஜேகே நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்........


பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம்...

2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவாக வேண்டும் என வலியுறுத்தல்...

கோடை காலம் என்பதால், வெப்பம் உச்சத்தை தொடும் முன்பாக வாக்களிக்குமாறும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்...

Tags:    

மேலும் செய்திகள்