மன்னார்குடியில் லீ குவானுக்கு சிலை.. - காரணம் என்ன? Lee Kuan Yew | Singapore | ThanthiTV

Update: 2023-05-25 14:00 GMT

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ விற்கு சிலை அமைப்பதை வரவேற்பதாக மன்னார்குடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 1960 - களில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, சிங்கப்பூர் அரசு தொழிலாளர்களை அழைத்துச் செல்ல இலவச கப்பல் பயணத்தை அறிமுகப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதன் விளைவாக மன்னார்குடி சுற்றுவட்டார கிராமங்களான பரவக்கோட்டை கூப்பாட்சிகோட்டை திருமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரத்தில் உயர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ- விற்க்கு மன்னார்குடியில் சிலை அமைக்க இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது என மன்னார்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்