எஸ்.ஐ வெளியிட்ட அவதூறு ஆடியோ - எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை

Update: 2023-02-25 09:01 GMT

கன்னியாகுமரியில் போலீசார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ரணியல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜான்போஸ்கோ.

இவர் காவல்துறை குறித்தும், தன்னுடன் பணிபுரியும் சக காவலர்கள் பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆடியோ சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளரை ஆயுதப்படை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்