சிவகார்த்திகேயனின் அயலான் - இன்று வெளியாகிறது அப்டேட் ...

Update: 2023-04-23 23:06 GMT

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தின் அப்டேட், இன்று காலை 11. 04 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4500க்கும் மேற்பட்ட வி.எப்.எக்ஸ் (VFX) காட்சிகளை கொண்ட, இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக, அயலான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலான் திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாததால், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளதாகவும் கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்