நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மே மாதம் 21 - ஆம் தேதி நடைபெற்ற நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் முன் கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-06-02 02:51 GMT

கடந்த மே மாதம் 21 - ஆம் தேதி நடைபெற்ற நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் முன் கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 21 - ஆம் தேதி நாடு முழுவதும் 849 மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வை எழுதினர்.

இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு நடந்து முடிந்த பத்தே நாட்களுக்குள் குறித்த அட்டவணைக்கு முன்பாகவே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வர்கள் natboard.edu.in என்ற இணையதளம் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. முது நிலை நீட் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா 10 நாட்களுக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு சாதனை படைத்துள்ள தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்