"முதலில் தயக்கம், அடுத்து சிக்ஸ்" - அஸ்வினுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் உதயநிதி

Update: 2023-04-12 11:48 GMT

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பயிற்சி திட்டத்தின்படி மாணவர்களுக்கு அஸ்வின் கிரிக்கெட் பயிற்சி அளிக்க உள்ளார்.

இதனிடையே, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு என அஸ்வின் நிகழ்ச்சியில் கூறினார்.

அஸ்வின் பயிற்சி அளிப்பதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்