"இளைஞர்களை ஏமாற்றும் பாஜக அரசு" "ஜூன் மாதம் 1.03 கோடி பேர் வேலையிழப்பு" - பிரியங்கா காந்தி
"BJP Govt Cheating Youth" - Priyanka Gandhi
"2022 ஜூன் மாதம் 1.03 கோடி பேர் வேலையிழப்பு"
"30 லட்சம் அரசு வேலை காலியாக உள்ளது"
"வெற்று பேச்சு பேசி இளைஞர்களை ஏமாற்றும் பாஜக அரசு"
காங். பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோயுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில்,
கடந்த 12 மாதங்களில் இல்லாத வகையில் இந்த மாதம் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்து போய் விட்டது என புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2022 -ல் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் மட்டும் 12 ஆயிரம் பேர், வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் 30 லட்சம் அரசு வேலை காலியாக இருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், மத்திய பாஜக அரசு, வெற்று பேச்சு பேசி இளைஞர்களை ஏமாற்றுகிறதே ஒழிய வேலை தர மறுக்கிறது என்றும் பிரியாங்கா காந்தி சாடியுள்ளார்.