அசுர வேகத்தில் மோதிய இரு ரயில்கள்..15 பேர் பலி..வங்கதேசத்தில் பயங்கரம்

Update: 2023-10-24 02:34 GMT

வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தலைநகர் டாக்காவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைரவ் என்ற இடத்தில், சரக்கு ரயில் ஒன்று எதிரில் வந்த பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்