2 நாளில் 7 முறை வானில் மேக விதைப்பு? இயற்கையை செயற்கையால் சீண்டிய விபரீதம் - மிதக்கும் துபாய்

Update: 2024-04-18 05:21 GMT

 #uaeflood | #dubaiflood | #dubai

2 நாளில் 7 முறை வானில் மேக விதைப்பு?

இயற்கையை செயற்கையால் சீண்டிய விபரீதம்

12 மணி நேரத்தில் ஒன்றரை ஆண்டின் மழை

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் ஒன்றரை ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை கொட்டித்தீர்த்ததால்..பாலைவன பூமி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

அரேபிய தீபகற்ப பகுதியை கடந்து சென்ற ஒற்றை புயலால்...பெருவெள்ளத்தில் தத்தளித்தது ஐக்கிய அரபு அமீரகம்..

வறண்ட வானிலையையே இயல்பாக கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் கார்கள் மூழ்கும் அளவிற்கு சாலைகளில் மழைநீர் தேங்கி கடும் சேதத்தை உருவாக்கியுள்ளது.

துபாய் மட்டுமன்றி புயலின் தாக்கத்தால், பஹ்ரைனிலும் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உலகிலேயே பரபரப்பான விமான நிலையமாக கருதப்படும் துபாய் விமான நிலையத்தில் விமானங்கள் நீந்தி செல்லும் நிலைக்கு ஆளாகின...

வானிலை ஆய்வு மையங்களின் தரவுகள் படி, 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. துபாயில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பெய்யக்கூடிய மொத்த சராசரி மழையளவு 12 மணி நேரத்தில் பெய்திருப்பதாக கூறப்படுகிறது..

காலநிலை மாற்றத்தின் விளைவாகவே பெருமழை பெய்ததாக கூறப்படும் நிலையில், ஐக்கிய அரபு அமீரக தேசிய வானிலை மையம், மேக விதைப்பு நடத்தி செயற்கை மழையை தூண்டியதே துபாயில் பெய்த பெருமழைக்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மழைப்பொழிவுக்கு முன்னதாக, மேகங்களில் இருந்து மழையை தூண்டும் வகையில் சில்வர் அயோடைடு, பொட்டாசியம் கிளோரைடு மற்றும் சோடியம் கிளோரைடு உள்ளிட்ட வேதி பொருட்களை விமானம் மூலம் மேகங்களில் தூவும் முயற்சியில் வானிலை ஆய்வு மையம் ஈடுபட்டதாகவும்..

2 நாட்கள் நடந்த இந்த நடைமுறையில் சுமார் 7 முறை மேக விதைப்பு செய்ய விமானங்கள் அனுப்பப்பட்டதாக உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்..

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யாத நிலையில், பெருவெள்ளத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது துபாய்.

Tags:    

மேலும் செய்திகள்