தலிபான்களை தடுக்கும் கூகுள் - 25 ஜிமெயில் கணக்குகள் முடக்கம்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பின், முன்னாள் ஆப்கன் அரசு அதிகாரிகளை பழிவாங்க, அவர்கள் பயன்படுத்திய ஜிமெயில் கணக்குகளை ஆராய்ந்து, தகவல்களை திரட்ட முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-04 14:39 GMT
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பின், முன்னாள் ஆப்கன் அரசு அதிகாரிகளை பழிவாங்க, அவர்கள் பயன்படுத்திய ஜிமெயில் கணக்குகளை ஆராய்ந்து, தகவல்களை திரட்ட முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தடுக்க சுமார் 25 ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. ஆப்கன் அரசின் நிதித் துறை, தொழில்த் துறை, உயர் கல்வித் துறை, சுரங்கத் துறை போன்ற அமைச்சரகங்களில் பணி புரிந்த 25 அதிகாரிகள், தங்களின் பணிகளுக்காக ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வந்தனர். இந்த கணக்குகளை கையகப்படுத்தி, அவற்றில் உள்ள தகவல்களை திரட்ட தலிபான்கள் முயன்றனர். அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆப்கானிஸ்தானின் கள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்