தலிபான்கள் ஆட்சிக்கு அதிபரின் சகோதரர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைபற்றியுள்ள நிலையில், முன்னாள் அதிபரின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமது சாய் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-22 04:23 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைபற்றியுள்ள நிலையில், முன்னாள் அதிபரின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமது சாய் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றியதால் முன்னாள் அதிபர்  அஷ்ரப் கனி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுசாய், தலிபான்களின் தலைவர் கலீல்-உர்-ரஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மஹ்மூத் ஜாகிர் முன்னிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்