கியூபாவில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் - ஆதரவு தரும் இசைப் பிரபலங்கள்

கியூபாவில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புகழ்பெற்ற கியூப இசைக்கலைஞர்கள் மக்களுக்கு கை கொடுக்க களத்தில் இறங்கியுள்ளனர்.

Update: 2021-07-15 08:22 GMT
கியூபாவில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புகழ்பெற்ற கியூப இசைக்கலைஞர்கள் மக்களுக்கு கை கொடுக்க களத்தில் இறங்கியுள்ளனர்.  பிரபல இசைக்குழு லாஸ் வேன் வேன், பியானிஸ்ட் சுச்சோ வேல்டஸ், மற்றும் பாடகர் லியோனி டோரெஸ் ஆகியோர் களத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவு அளிக்கு விதமாக, இசை மூலம் தங்கள் ஆதரவை நல்கியுள்ளனர். ஜென்டெ டெ சொனா உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கிய அரசுக்கு எதிரான, "ஹோம்லேண்ட் அன்ட் லைஃப்" என்ற பாடல் வைரலானது. இந்நிலையில், தங்களது உரிமைக்காகப் போராடும் ஆயிரக்கணக்கான கியூப மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக லாஸ் வேன் வேன் இசைக்குழு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கியூப அரசு மக்களின் போராட்டத்தை ஒடுக்க பலத்த காவல்துறை பாதுகாப்பை ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்