பயணிகள் போக்குவரத்தில் உருவாகும் புரட்சி - பாரிஸ் நகரில் பறக்கும் டாக்ஸி

பிரான்ஸில் மிக விரைவில் பறக்கும் டாக்ஸிக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அது பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

Update: 2021-06-24 08:52 GMT
பிரான்ஸில் மிக விரைவில் பறக்கும் டாக்ஸிக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அது பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

ஜெர்மனியைச் சேர்ந்த ஓலோகாப்டர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஓலோசிட்டி என்ற சிறிய வடிவ மின்சார ஹெலிகாப்ட்டரில் இரண்டு பேர் பயணிக்க முடியும்.

பறக்கும் டாக்ஸி என அழைக்கப்படும் இது, முழுவதும் தானியங்கி முறையில், ஓட்டுனரே இல்லாமல் பறக்கும் திறன் படைத்தது. 

பெரு நகரங்களில் வான்வழி டாக்சி சேவைகளை மலிவான விலையில் அளிக்க ஓலோகாப்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் லீ போர்கே விமான நிலையத்தில், ஆட்கள் யாருமில்லாத ஓலோசிட்டி வான்வழி டாக்சியின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.

பேட்டரியில் இயங்கும் இந்த பறக்கும் டாக்ஸி வாகனத்தில், பயணிகளின் பெட்டிகளை வைக்க தனி இடம் உள்ளது. 

ஹெலிகாப்டர் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இதை தற்போது ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும், தானியங்கி முறையில் இதில் பயணம் செய்ய வகை செய்யப்படும் என்று இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஒரு சாதாரண டாக்சி கட்டணத்தின் அளவுக்கு, இதன் கட்டணங்களும் மிக மலிவாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

2035க்குள் ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஹெலிகாப்டர் டாக்சி சந்தை விரிவடையும் எனவும் இந்நிறுவன தலைவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்