இலங்கை தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஒன்றுபட்ட இலங்கையில் சமரசம் மற்றும் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-26 10:30 GMT
இந்தியா-இலங்கை மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. இந்த மாநாட்டில்,  பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை பிரதமர் ராஜபக்ஷ இருதரப்பு உறவு குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையின் போது, பேசிய பிரதமர் மோடி, ஒன்றுபட்ட இலங்கையில் சமரசம் மற்றும் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகள் இடையேயான, உறவுகளை மேம்படுத்த, இலங்கைக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா அறிவித்துள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்